அமீரக செய்திகள்
அனுமதியின்றி எரியக்கூடிய திரவங்கள் கொண்ட தொட்டிகளை நிறுவினால் 30,000 திர்ஹம் அபராதம்
அபுதாபியில் அனுமதியின்றி அபாயகரமான பொருட்கள் அல்லது எரியக்கூடிய திரவங்கள் கொண்ட தொட்டிகளை நிறுவுபவர்களுக்கு எதிராக மிகப்பெரிய அபராதம் விதிக்கப்படும் என்று அபுதாபி சிவில் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
அமைச்சரவை தீர்மானத்தின்படி, மீறுபவர்களுக்கு 30,000 திர்ஹம்கள் அபராதம் விதிக்கப்படும். தனிநபர்கள் அதை நிறுவும் முன் சிவில் டிஃபென்ஸிடம் இருந்து அனுமதி பெற வேண்டும்.
இது தீர்மானத்தின் 126வது தொகுதியை மீறுவதாகும்.
#tamilgulf