ஷார்ஜாவில் 12 வயது சிறுவன் வாகனம் மோதி உயிரிழப்பு

கடந்த வாரம் ஷார்ஜாவில் நடந்த பயங்கர விபத்தில் 12 வயது சிறுவன் வாகனம் மோதி உயிரிழந்தான்.
எமிரேட்டில் உள்ள பழைய எக்ஸ்போ இன்டர்சேஞ்ச் அருகே சிறுவன் போக்குவரத்து சிக்னலில் சாலையை கடக்கும்போது இந்த விபத்து நடந்துள்ளது.
ஷார்ஜா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறுவன் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
ஷார்ஜா காவல்துறையின் கமாண்டர்-இன்-சீஃப் மேஜர் ஜெனரல் சைஃப் அல் ஜாரி அல் ஷம்சி கூறுகையில், சிறுவனுக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டதால், மருத்துவமனையில் அவரை காப்பாற்ற மருத்துவ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான். “போக்குவரத்து விளக்குகள் வாகனங்களுக்கு பச்சை நிறமாகவும் பாதசாரிகளுக்கு சிவப்பு நிறமாகவும் இருந்தபோது இந்த சோகம் நடந்தது” என்று மேஜர் ஜெனரல் அல் ஷம்சி விளக்கினார்.
“ஓட்டுனர் சிக்னல் வழியாக நகர்ந்தபோது, சிறுவன் திடீரென இடது பக்கத்திலிருந்து வந்துள்ளான், இதன் விளைவாக ஆபத்தான விபத்து ஏற்பட்டது.”
வாகன ஓட்டிக்கு எதிராக போக்குவரத்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.