ஓமன் செய்திகள்
போலீஸ் அதிகாரிகளைப் போல் ஆள் மாறாட்டம் செய்த 4 பேர் கைது
மஸ்கட்: போலீஸ் அதிகாரிகளை போன்று வேடமிட்டு, வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை தாக்கி, பணத்தை திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக ராயல் ஓமன் காவல்துறை கூறியதாவது: “காவல்துறை அதிகாரிகளைப் போல் ஆள்மாறாட்டம் செய்து, வெளி நாட்டினர் குழுவைத் தாக்கி, அவர்களின் பணத்தைத் திருடிய நான்கு பேரை தெற்கு அல் பாடினா கவர்னரேட் காவல் ஆணையர் கைது செய்துள்ளனர்.
மேலும் அவர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டு அவர்களுக்கு எதிரான சட்ட நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என ஓமன் காவல் துறை கூறியுள்ளது.
#tamilgulf