மழையின் போது ஸ்டண்ட் செய்த 11 வாகனங்கள் பறிமுதல்

மழையின் போது கவனக்குறைவாக வாகனம் ஓட்டிய மற்றும் ஸ்டண்ட் செய்த 11 வாகனங்களை ஷார்ஜா போலீசார் பறிமுதல் செய்தனர் .
ஷார்ஜா போலீஸ் ஜெனரல் கமாண்டில் உள்ள போக்குவரத்து மற்றும் ரோந்து துறையினர், ஓட்டுநர்கள் கவனக்குறைவாக ஸ்டண்ட் செய்து, அவர்களின் உயிருக்கும் மற்ற வாகன ஓட்டிகளுக்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் ஈடுபட்டதால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.
ஸ்டண்ட் நடந்த அதே இடத்தில் கூட்டம் கூடிய விதிமீறல்களுக்காக 84 வாகனங்கள் பிடிபட்டதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது.
கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவது குறித்து வாகன ஓட்டிகளை அதிகாரிகள் பலமுறை எச்சரித்துள்ளனர். மேலும் வாகனம் 60 நாட்களுக்கு பறிமுதல் செய்யப்படும் என்றும் கூறியுள்ளனர்.
ஓட்டுநர்கள் சட்டங்கள் மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்குமாறு அதிகார சபை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. மேலும், இதுபோன்ற சம்பவங்கள் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு குடியிருப்பாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.