சவுதி செய்திகள்

சவுதி-ஈரானிய உறவுகளின் புதிய கட்டத்தை எதிர்நோக்குகிறோம் – சவுதி அமைச்சரவை கருத்து

பொது நலன்கள் மற்றும் பரஸ்பர மரியாதை அடிப்படையில் சவுதி-ஈரானிய உறவுகளின் புதிய கட்டத்தை எதிர்நோக்குகிறோம் என்று சவுதி அரேபியாவின் அமைச்சரவை தெரிவித்துள்ளது.

சவுதி மற்றும் ஈரானுக்கு இடையிலான உறவுகளை மீண்டும் தொடங்குவதற்கான உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பின்பற்றி வருவதாக அமைச்சரவை தெரிவித்துள்ளது.

சவூதி இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் ஆகியோருக்கு இடையில் அண்மையில் இடம்பெற்ற தொலைபேசி அழைப்பின் உள்ளடக்கம் குறித்து அமைச்சரவைக்கு விளக்கப்பட்டது. இதன் போது அவர்கள் கூட்டு ஒத்துழைப்பின் அம்சங்கள் மற்றும் சர்வதேச அபிவிருத்திகள் பற்றிய கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button