Uncategorized

மைசூர் பாக்…!!

அம்மா அப்படி செய்திருக்கக் கூடாது
அப்பா இப்படி மறைத்துக் இருக்கக்கூடாது
தாத்தாவுக்கு தெரிந்தால்
நமக்கும் பங்கு கிடைக்கும்
பாட்டி கணக்குப்படி மீதம்
இருப்பது இருபது மட்டுமே…
மிக சுலபமாக கண்டு
பிடித்து விடுவார்கள்
இப்போது எடுத்தால்..
எண்ணிக்கை கூடுதல் இருந்தால்
இ‌ந்த சிக்கல் இருந்திருக்காது…
என்ன செய்வது
கூட்டணி முயற்சியில்
அக்காவும் அண்ணனும்
இணையவில்லை
தங்கையும் நானும் மட்டும்தான்
ஐடியா பார்ட்னர் எறும்புகள்
எப்போதும் போல் இணைந்த கைகள்
பரண் மேல் ஏறி
பத்து பத்திரத்தை பத்திரமாய் அணுகி
இரும்பு தூக்கில்
ஒளித்து வைத்த மைசூர் பாக்கை
ஓரமாக கடித்து
எண்ணிக்கை மாறாமல்
இளைக்க செய்து
இளைப்பாறிய நேரம்
காட்டுக்கு போன அப்பாவின்
செருப்பு சத்தம்…
அவர் பங்குக்கு ஒரு கடி…
காதை கிள்ளி விட்டு
சொன்னார்…
களவும் கற்று மற என்று…

எண்ணிக்கை மாறாமல்
நாங்கள் எடுத்த மைசூர் பாக்…
கரைந்தாலும் காட்டி
கொடுக்காத கணம்
அதன் குணம்
தீபாவளிக்கு செய்த
தித்திக்கும் மைசூர் பாக்கு

சுவைத்தவன்
–யுகா

Mysore pak
#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button