அமீரக செய்திகள்
மாஸ்கோவிற்கு விமானங்கள் திட்டமிட்டபடி இயங்கும் – ஃபிளை துபாய் அறிவிப்பு

மாஸ்கோவிற்கு அதன் விமானங்கள் திட்டமிட்டபடி இயங்கும் என்று Flydubai கூறியுள்ளது. மாஸ்கோவின் நான்கு முக்கிய விமான நிலையங்களான Vnukovo, Domodedovo, Sheremetyevo மற்றும் Zhukovsky ஆகியவற்றிலிருந்து வந்து மற்றும் செல்லும் விமானங்கள் தடைசெய்யப்பட்டது.
ட்ரோன் நடவடிக்கை காரணமாக 45 பயணிகள் விமானங்கள் மற்றும் இரண்டு சரக்கு விமானங்கள் தடை செய்யப்பட்டன. இந்நிலையில், இன்று Flydubai விமானங்கள் மாஸ்கோ Vnukovo சர்வதேச விமான நிலையத்திற்கு (VKO) திட்டமிடப்பட்டபடி இயக்கப்படுகின்றன.
நாங்கள் தொடர்ந்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம் என்று அதிகாரிகள் அறிக்கையில் தெரிவித்தனர்.
#tamilgulf