அமீரக செய்திகள்

பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவியாக 50 மில்லியன் திர்ஹம் வழங்க எமிரேட்ஸ் துணைத் தலைவர் உத்தரவு

காசா பகுதியில் நடந்து வரும் போரின் நடுவில் சிக்கித் தவிக்கும் பாலஸ்தீனியர்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் ஐக்கிய அரபு அமீரகம் மனிதாபிமான பிரச்சாரத்தை தொடங்கியது.

இந்நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஹிஸ் ஹைனஸ் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம், முகமது பின் ரஷித் அல் மக்தூம் குளோபல் முன்முயற்சிகள் (MBRGI) மூலம் பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவியாக 50 மில்லியன் திர்ஹம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

நெருக்கடி காலங்களில் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கும் உலகெங்கிலும் தேவைப்படும் மக்களுக்கும் அவசர நிவாரணம் மற்றும் உதவிகளை வழங்குவதற்கான UAE இன் கொள்கையின் ஒரு பகுதியாக இந்த உதவி வருகிறது.

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button