அமீரக செய்திகள்

துபாயில் 2 புதிய பிரிட்டிஷ் பாடத்திட்டத்தை கொண்ட பள்ளிகள் திறப்பு

துபாயில் செப்டம்பர் மாதம் இந்த ஆண்டிற்கான கல்வியாண்டு தொடங்க உள்ளது. இதற்காக, 6,400 இடங்களுக்கு மேல் திறன் கொண்ட புதிய பள்ளி வளாகத்தை பிரிட்டிஷ் பாடத்திட்டத்தை உள்ளடைக்கிய பள்ளிகள் தொடங்கியுள்ளன.

GEMS Metropole School – அல் வஹா (MTW) ​​3,450 மாணவர்களைக் கொண்ட அதன் புதிய வளாகத்தை ஆகஸ்ட் 28 அன்று திறக்க உள்ளது. பள்ளி பிரிட்டிஷ் பாடத்திட்டத்தைப் பின்பற்றி, மாணவர்களுக்கும், GCSE மற்றும் A-நிலைப் படிப்புகளையும் வழங்குகிறது. பள்ளியானது இரண்டு வெளிப்புற நீச்சல் குளங்கள், இரண்டு விளையாட்டு அரங்குகள் மற்றும் ஒரு பயோ டோம் உட்பட பல வசதிகளை வழங்குகிறது. மாணவர் சேர்க்கை ஆரம்ப இலக்குகளை தாண்டியுள்ளது.

Glendale International School – ஊட் மேத்தாவில் அமைந்துள்ள இந்த பள்ளி உள்ள ஆகஸ்ட் 28, 2023 அன்று திறக்கிறது. இந்த பிரிட்டிஷ் பாடத்திட்டப் பள்ளி 3,000 மாணவர்களுக்கான திறனுடன் திறக்கப்படுகிறது. புதிய பள்ளியானது சிங்கப்பூரை தளமாகக் கொண்ட குளோபல் ஸ்கூல்ஸ் ஃபவுண்டேஷனின் (GSF) ஒரு முன்முயற்சியாகும். மேலும் இது உலகின் முன்னணி விருது வழங்கும் அமைப்புகளின் கல்வி மற்றும் நிறுவன ரீதியில் 450க்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளது.

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button