சவுதி செய்திகள்
ஜசான் எல்லையில் கடத்த முயன்ற 50 கிலோ காட் முயற்சி முறியடிப்பு

ரியாத்
சவுதி அரேபியாவில் பல்வேறு போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றனர். இந்நிலையில், ஜசான் எல்லைப் பாதுகாப்புப் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது ராஜ்யத்திற்குள் கடத்த முயன்ற 50 கிலோ காட் முயற்சியை முறியடித்தனர்.
சவூதி அரசாங்கம் சந்தேகத்திற்குரிய கடத்தல் நடவடிக்கைகள் அல்லது சுங்க மீறல்கள் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் இரகசிய ஹாட்லைன் 1910, சர்வதேச எண் 00 966 114208417 அல்லது மின்னஞ்சல் 1910@zatca.gov.sa க்கு அழைக்குமாறு வலியுறுத்தியுள்ளது .
சந்தேகத்திற்கிடமான போதைப்பொருள் கடத்தல் வழக்குகளைப் பற்றி அதிகாரிகளுக்குத் தெரிவிப்பவர்கள் கடுமையான இரகசியத்துடன் நடத்தப்படுகிறார்கள். சரியான உதவிக்குறிப்புகளுக்கு நிதி வெகுமதிகள் வழங்கப்படுகின்றன.
#tamilgulf