இந்தியா செய்திகள்சிறப்பு செய்திகள்

சந்திரயான்-3 விண்கலத்தின் தற்போதைய நிலை என்ன? நிலவை நெருங்குகிறதா?

இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை அனுப்பியுள்ளது. கடந்த ஜூலை மாதம் 14-ந்தேதி ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்துசந்திரயான்-3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.

முதலில் பூமியின் சுற்றுவட்ட பாதையில் சுற்றிய சந்திரயான்-3 விண்கலம் கடந்த 5-ந்தேதி நிலவின் சுற்று வட்ட பாதைக்குள் நுழைந்தது. அதிகபட்சமாக சுமார் 18 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் நீள் வட்ட பாதையில் முதலில் சுற்றியது. இதையடுத்து படிப்படியாக நிலவின் மேற்பரப்பில் இருந்து சந்திரயான்-3 விண்கலம் இருக்கும் உயரம் குறைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த தூரத்தை மேலும் குறைத்து நிலவுக்கு 100 கிலோ மீட்டர் தொலைவில் சந்திரயான்-3 விண்கலத்தை நிலைநிறுத்தும் பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டு வந்தனர்.

Gulf News Tamil

இதில் 4-ம் கட்டமாக சுற்றுப் பாதை குறைப்பு பணியை இன்று தொடங்க திட்டமிடப்பட்டது. அதன்படி இன்று காலை 8.30 மணிக்கு சந்திரயான்-3 விண்கலத்தின் உயரத்தை 100 கிலோ மீட்டராக குறைக்கும் பணி தொடங்கியது. இப்பணி வெற்றிகரமாக நடந்துள்ளது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவின் சுற்று வட்டப் பாதையில் 153 கி.மீx163 கி.மீ. தொலைவில் விண்கலம் சுற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button