அமீரக செய்திகள்

சட்டவிரோத போதைப் பொருட்களைக் கடத்திய ஐரோப்பிய நாட்டு பயணி கைது

ஐரோப்பிய நாட்டிலிருந்து வந்த பயணி ஒருவர் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் (DXB) மாயத்தோற்ற மாத்திரைகள் மற்றும் பிற சட்டவிரோத போதைப் பொருட்களைக் கடத்தியதற்காக கைது செய்யப்பட்டார்.

வெள்ளிக்கிழமை அல் பயான் என்ற அரபு செய்தித்தாளில் வெளிவந்த செய்தியின்படி, பயணி தனது லக்கேஜில் 7.38 கிராம் எடையுள்ள கிராக் கோகோயின் மற்றும் 274.59 கிராம் கிரிஸ்டல் மீதாம்ப், 13.84 கிராம் எடையுள்ள 292 மயக்க மாத்திரைகள், 5 மாயத்தோற்ற முத்திரைகள் மற்றும் 13.84 கிராம் எடையுள்ள ஹாலுசினோஜெனிக் பவுடர் ஆகியவற்றை மறைத்து வைத்திருந்தார் .

துபாய் சுங்கத்தின் பயணிகள் செயல்பாட்டுத் துறையின் இயக்குநர் காலித் அகமது இது பற்றி கூறுகையில், சட்டவிரோத போதைப்பொருளிலிருந்து சமூகத்தைப் பாதுகாக்க அதிகாரிகள் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். எங்களிடம் உயர் தகுதி, திறன் மற்றும் அனுபவம் கொண்ட ஆய்வாளர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளனர். போதைப்பொருள் கடத்தலை எதிர்த்து துபாயில் உள்ள விமான நிலையங்கள் மற்றும் அனைத்து சுங்கத்துறை துறைமுகங்களிலும் சமீபத்திய ஆய்வு சாதனங்களை அவர்கள் பயன்படுத்துகின்றனர் என்று தெரிவித்தார்.

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button