ஓணம் பண்டிகையை கொண்டாடிய ஐக்கிய அரபு எமிரேட் சுகாதாரப் பணியாளர்கள்!

அபுதாபி, துபாய், ஷார்ஜா மற்றும் வடக்கு எமிரேட்களைச் சேர்ந்த 1,000 க்கும் மேற்பட்ட ஐக்கிய அரபு எமிரேட் சுகாதாரப் பணியாளர்கள் 15 மணி நேரத்திற்கும் மேலாக ஒன்றிணைந்து 750 கிலோ பூக்களைக் கொண்டு ஒரு மாபெரும் மலர் கம்பளத்தை உருவாக்கி, கேரளாவின் அறுவடைத் திருநாளான ஓணத்தைக் கொண்டாடினர்.
இது குறித்து நிர்வாகத் துறையில் பணிபுரியும் எமிரேட்டியைச் சேர்ந்த ஷுக் அல்மேமரி கூறியதாவது:- “ஓணம் கொண்டாட்டங்களில் பங்கேற்பது இதுவே முதல் முறை. அழகான மலர் கம்பளத்தை ஏற்பாடு செய்ய உதவுவதில் நான் மகிழ்ச்சியடைந்தேன் மற்றும் தேவையான கலை திறன்களால் ஈர்க்கப்பட்டேன். எனது சகாக்கள் நடத்திய நிகழ்ச்சிகளைப் பார்த்து இந்திய கலாச்சாரத்தைப் பற்றி மேலும் அறிந்து கொள்வதில் மகிழ்ந்தேன்” என்றார்.
எண்டோஸ்கோபி பிரிவைச் சேர்ந்த பிலிப்பைன்ஸ் செவிலியர் ஜாய்ஸ் ஆன் வென்சோன் கூறுகையில், “இது ஒரு வேடிக்கை நிறைந்த பண்டிகை நிகழ்வு, இது எங்கள் அனைவரையும் ஒன்றாக இணைத்துள்ளது. சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் நாம் அனைவரும் கவனம் செலுத்த வேண்டிய அவசரத் தேவை குறித்து இந்த முயற்சி மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். ஒட்டுமொத்தமாக, இது கேரளாவின் பண்டிகைகள், பாரம்பரியங்கள் மற்றும் இந்திய கலாச்சாரம் பற்றி மேலும் அறிய வண்ணமயமான மற்றும் செழுமைப்படுத்தும் நிகழ்வாக இருந்தது” என்று தெரிவித்தார்.