ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சில பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்

துபாய் மற்றும் அபுதாபியின் சில பகுதிகளில் புதன்கிழமை காலை பனிமூட்டத்துடன் காணப்பட்டது. இருப்பினும், இன்றைய நாள் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) வழங்கிய அறிவுரையில் கூறப்பட்டுள்ளதாவது:- சில சாலைகளில் தெரிவுநிலை குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகளை எச்சரிக்கையாக இருக்குமாறு வலியுறுத்தியுள்ளது. அதிகாலை 3 மணி முதல் காலை 8 மணி வரை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
துபாய் மற்றும் அபுதாபியில் பனிமூட்டத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள்:

இன்று இரவு முதல் வியாழன் காலை வரை, ஈரப்பதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சில கடலோர மற்றும் உள்நாட்டுப் பகுதிகளில் காற்று லேசானது முதல் மிதமான வேகத்தில் இருக்கும், பகலில் சில நேரங்களில் வேகமாக இருக்க வாய்ப்புள்ளது.