அல்ஜீரியாவில் மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு

அல்ஜியர்ஸ்
மேற்கு அல்ஜீரியாவில் பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் சிவில் பாதுகாப்பு சேவை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
சனிக்கிழமையன்று Tlemcen மற்றும் El-Bayadh ஆகிய இடங்களில் எட்டு பேரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக சிவில் பாதுகாப்பு சேவை கூறியது.
22 மற்றும் 73 வயதுடைய இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்களின் சடலங்கள் வடமேற்கில் உள்ள Tlemcen இல் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டதாக சிவில் பாதுகாப்பு தெரிவித்துள்ளது. தென்மேற்கில் உள்ள எல் பயாத் என்ற இடத்தில், Oued Chadli ஆற்றின் வெள்ளத்தில் கார் அடித்துச் செல்லப்பட்டதில் மூன்று பெண்களும் ஒரு ஆணும் உயிரிழந்தனர்.
அல்ஜீரியாவின் வானிலை அலுவலகம் வெள்ளிக்கிழமை எச்சரிக்கை புல்லட்டின் வெளியிட்டது, அதில் நாட்டின் வடக்கில் சனிக்கிழமை முதல் மழை பெய்யும் என்று கூறியிருந்தது.