மகளிர் கபடி: ஏபிஎஸ் ஸ்போர்ட்ஸ் துபாயில் நடத்துகிறது

ஐக்கிய அரபு எமிரேட்ஸை தலைமைத் தளமாகக் கொண்ட விளையாட்டு நிகழ்வு மேலாண்மை மற்றும் பயிற்சி நிறுவனமான ஏபிஎஸ் ஸ்போர்ட்ஸ், துபாயின் முதல் பிஎல் (PKL – Pro Kabaddi League ) பாணி மகளிர் கபடி லீக்கை ஜூன் 16 முதல் ஜூன் 27 வரை துபாயில் நடத்துவதாக அறிவித்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இந்த விளையாட்டினை அறிமுகப்படுத்தவும், மற்றும் அதன் பெருமையை துபாயில் உயர்த்தும் முயற்சியில், துபாயில் உள்ள ஷபாப் அல் அஹ்லி ஸ்போர்ட்ஸ் கிளப்பில் (Shabab Al Ahli Sports Club) போட்டியிடும் எட்டு அணிகளைச் சேர்ந்த 96 பெண்கள் லீக்கில் இடம்பெறுவார்கள்.
இந்தப் போட்டியில் இந்தியவைச்சார்ந்த குஜராத் லயன்ஸ், கிரேட் மராத்தா, ஹரியானா ஃபைட்டர், ராஜஸ்தான் டைகர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், துபாய் ஹாக்ஸ், தமிழ் லெஜண்ட்ஸ் மற்றும் டெல்லி கிங்டம் ஆகிய எட்டு அணிகள் பங்கேற்கின்றன.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இந்த விளையாட்டை அறிமுகப்படுத்துவதற்கும், இளைஞர்கள், குறிப்பாக பெண்கள், விளையாட்டுகளில் அதிக உடல் உழைப்புடன் ஈடுபடுவதற்கும் இந்த போட்டியை ஒரு தளமாகப் பயன்படுத்துவதை ஏபிஎஸ் ஸ்போர்ட்ஸ் நோக்கமாகக் கொண்டுள்ளது.
“துபாய் ஏற்கனவே பல உயர்தர விளையாட்டுகளுக்கு தாயகமாக உள்ளது. இந்தியாவில் மிகவும் பிரபலமானது மற்றும் இப்போது காமன்வெல்த் விளையாட்டுகளின் ஒரு பகுதியாக இருந்தாலும், வயது மற்றும் பாலினத்தைப் பொருட்படுத்தாமல் கபடி அனைவருக்கும் ஒரு சுவாரஸ்யமான விளையாட்டாக உள்ளது” என்று ஏபிஎஸ் ஸ்போர்ட்ஸின் (ABS Sports ) நிறுவனர் பிரதீப் நெஹ்ரா கூறினார்.
“இதை துபாய்க்கு கொண்டு வருவதன் மூலம், மத்திய கிழக்கில் உள்ள பெண்களை இந்த விளையாட்டில் ஈடுபட ஊக்குவிக்க விரும்புகிறோம். போட்டியிடும் வீரர்களுக்கு நாங்கள் சிறந்து விளங்க வாழ்த்துகிறோம்.”
இந்தியாவில் இருந்து உருவான இந்த தொடர்பு விளையாட்டு, எதிரணியின் மைதானத்திற்குள் நுழைந்து, எதிர் அணியிடம் சிக்காமல் முடிந்தவரை பல பாதுகாப்பு வீரர்களைத் தொட்டு புள்ளிகளைப் பெறுவதற்காக இரண்டு அணிகளுக்கு இடையே விளையாடப்படுகிறது.
கபடி இந்தியாவில் கிரிக்கெட்டுக்குப் பிறகு இரண்டாவது பிரபலமான விளையாட்டாகும், இப்போது 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் விளையாடப்படும் ஒரு முக்கிய விளையாட்டாக வளர்ச்சியடைந்துள்ளது.