அமீரக செய்திகள்
வரலாறு காணாத கனமழைக்குப் பிறகு நிலையற்ற வானிலை குறையுமா?
வரலாறு காணாத கனமழைக்குப் பிறகு வானிலைத் துறை அடுத்த சில நாட்களுக்கு அதன் முன்னறிவிப்பைப் வெளியிட்டுள்ளது.
NCM வெளியிட்ட கடைசி வானிலை புதுப்பிப்பின்படி, புதன்கிழமை காலை முதல் மதியம் வரை, “மழையுடன் தொடர்புடைய கடலோரப் பகுதிகளில் சில வெப்பச்சலன மேகங்கள் உருவாகும், பின்னர் கிழக்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் குவியும், நண்பகலில் மேகங்கள் படிப்படியாகக் குறையும்”.
இன்றய மழைக்குப் பிறகு, NCM ன் ஐந்து நாள் வானிலை அறிக்கையின் படி ஞாயிற்றுக்கிழமை வரை மேலும் மழை பெய்ய வாய்ப்பில்லை.
வியாழக்கிழமை முதல் வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஐந்து நாட்களுக்கு சில பகுதிகளில் ஓரளவு மேகமூட்டமான நிலை நீடிக்கும், சனிக்கிழமை வரை மூடுபனிக்கான வாய்ப்புகள் உள்ளன.
#tamilgulf