இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசியை கட்டாயம் எடுக்க வேண்டியவர்கள் யார்? யார்?

வானிலை ஏற்ற இறக்கங்கள் மற்றும் மாறுதல்களால், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள பல குடியிருப்பாளர்கள் இன்ஃப்ளூயன்ஸா போன்ற தொற்றுநோய்களுக்கு உள்ளாகிவருகின்றனர்.
இன்ஃப்ளூயன்ஸா ஏ மற்றும் பி ஆகியவை குளிர்காலத்தில் பொதுவாக ஆண்டின் இந்த நேரத்தில் பரவும் வகைகளாகும். மறுபுறம், இன்ஃப்ளூயன்ஸா சி என்பது ஆண்டு முழுவதும் மனிதர்களுக்கு ஏற்படும் தொற்றுநோயாகும்
துபாயின் சுகாதார ஆணையம் சில குழுக்கள் இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசியை கட்டாயம் எடுக்குமாறு பரிந்துரைத்துள்ளது. அவர்கள் யாரெனில்,
மருத்துவ சேவை அளிப்போர்
6 மாதங்கள் முதல் 5 வயது வரையிலான குழந்தைகள்
65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதானவர்கள்
கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் கர்ப்பத்தின் அனைத்து நிலைகளிலும் உள்ளவர்கள்
யாத்ரீகர்கள்
நீரிழிவு, இதய நோய்கள், ஆஸ்துமா போன்ற நுரையீரல் நோய்கள், நாள்பட்ட கல்லீரல் நோய், நாள்பட்ட சிறுநீரக நோய் போன்ற நாள்பட்ட மருத்துவ நிலைமைகள் உள்ள நபர்கள்
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் 6 மாதங்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைவரும் வருடாந்திர காய்ச்சல் தடுப்பூசி பெற வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. இது 100 சதவீத பாதுகாப்பை வழங்காவிட்டாலும், ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் அது நோயின் தீவிரத்தை கணிசமாகக் குறைக்க உதவுகிறது.