அமீரக செய்திகள்

ஷார்ஜாவில் கன மழையால் வீட்டில் சிக்கித் தவிக்கும் குடும்பங்களுக்கு உதவ வாட்ஸ் அப் எண் அறிமுகம்

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கடந்த வாரம் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தைத் தொடர்ந்து ஷார்ஜாவில் உள்ள குடும்பங்களுக்கு உதவி தேவைப்படுகிறது. அத்தகைய குடும்பங்களது கோரிக்கைகளை கவனிக்குமாறு உள்ளூர் அவசர, நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை குழு, ஷார்ஜா சமூக சேவை துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

இதற்காக, 065015161 என்ற வாட்ஸ்அப் எண்ணை தொடங்கி, அதன் மூலம் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் தேவைகளை அறிந்து அவர்களுக்கு உதவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், புயலால் பாதிக்கப்பட்ட துபாயில் உள்ள குடிமக்களும் 0583009000 என்ற வாட்ஸ்அப் எண்ணில் கோரிக்கைகளைக் கூறலாம்.

ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் தீவிர வானிலைக்கு திட்டமிடுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த உத்தரவுகளின் கீழ், முகமது பின் ரஷீத் வீட்டு வசதி நிறுவனத்தின் செயல் இயக்குநர் உமர் ஹமத் புஷாஹப், பாதிக்கப்பட்ட குடிமக்களின் அனைத்து கோரிக்கைகளையும் ஆய்வு செய்து அவற்றை எவ்வாறு தீர்ப்பது என்பதை தீர்மானிக்க ஒரு குழுவை நிறுவினார்.

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button