அமீரக செய்திகள்
Weather: ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வெப்பநிலை மேலும் குறைய வாய்ப்பு

Today Weather: ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இன்றைய வானிலை பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும். சில கடலோர, வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் மழை பெய்யக்கூடும்.
தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) படி, வெப்பநிலை மேலும் குறைய வாய்ப்புள்ளது. மிதமான வேகத்தில் வீசும் காற்று தூசி மற்றும் அழுக்குகளை கிளறலாம்.
அரேபிய வளைகுடாவில் அலைகள் கொந்தளிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், கடலுக்குள் செல்வோர் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஓமன் கடலில், அலைகள் லேசானது முதல் மிதமானதாக இருக்கும்.
அபுதாபுவின் சில பகுதிகளில் வெப்பநிலை 12 டிகிரி செல்சியஸாகவும், துபாயில் 18 டிகிரி செல்சியஸாகவும் குறையும்.
#tamilgulf