அமீரக செய்திகள்
பிற்பகலில் சிலப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வானிலை ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்று தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது. பிற்பகலில் தீவுகள் மற்றும் சில மேற்குப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
அபுதாபியில் 21°C முதல் 25°C வரையிலும், துபாயில் 22°C முதல் 26°C வரையிலும் வெப்பநிலை இருக்கும். மலைப் பகுதிகளில் மெர்குரி 15 டிகிரி செல்சியஸ் வரை குறைவதைக் காணலாம்.
லேசானது முதல் மிதமான காற்று வீசும். அரேபிய வளைகுடா மற்றும் ஓமன் கடல் பகுதிகளில் கடல் கொந்தளிப்பாக இருக்கும்.
#tamilgulf