ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இன்றைய வானிலை நிலவரம்

அதிகாரப்பூர்வமாக மழைக்காலம் முடிந்து விட்டது என்றும், இன்று ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் என்று தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பொதுவாக மணிக்கு 15 முதல் 25 கிமீ வேகத்தில் காற்று லேசானது முதல் மிதமானது வரை வீசும். இருப்பினும், சில சமயங்களில் பலமாக இருக்கும் மற்றும் மணிக்கு 45 கிமீ வேகத்தில் வீசும், இது அரேபிய வளைகுடாவில் கடலில் கொந்தளிப்பை உருவாக்குகிறது. இது சில பகுதிகளில் தூசி நிறைந்த சூழலையும் ஏற்படுத்தலாம்.
இன்று மாலை முதல் வியாழன் காலை வரை ஈரப்பதத்துடன் இருக்கும் என வானிலை மையம் மேலும் தெரிவித்துள்ளது.
கோடை காலம் நெருங்கி வருவதற்கான அறிகுறியாக, துபாயில் வெப்பநிலை அதிகபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் ஆகவும், அபுதாபியின் சில புறநகர் பகுதிகளில் 31 டிகிரி செல்சியஸ் ஆகவும் வெப்பநிலை இருக்கும்.