பிரேசிலில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 100 டன் நிவாரண உதவிகளை அனுப்பிய ஐக்கிய அரபு அமீரகம்

சமீபத்தில் பிரேசிலை புரட்டிப் போட்ட வெள்ளம் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ 100 டன் உணவு, மருத்துவம் மற்றும் நிவாரண உதவிகளை ஏற்றிச் செல்லும் முதல் நிவாரண விமானத்தை ஐக்கிய அரபு அமீரகம் இன்று அனுப்பியது. ஜனாதிபதி ஷேக் முகமதுவின் உத்தரவின் பேரில் இந்த விமானம் அனுப்பப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வலுவான கண்காணிப்பு அமைப்புகள் வெள்ளம் மற்றும் அதன் பின் விளைவுகள் உட்பட பலவிதமான இயற்கை பேரழிவுகளை கண்காணிக்கும் என்று சர்வதேச ஒத்துழைப்புக்கான மாநில அமைச்சர் ரீம் பின்ட் இப்ராஹிம் அல் ஹாஷிமி கூறினார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனது வெளிநாட்டு உதவித் திட்டங்கள் மூலம் அவசர மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகிறது.
இன்று பறக்க விடப்பட்ட விமானத்தில் 100 டன் நிவாரணம், மருத்துவம் மற்றும் உணவு உதவிகள் உள்ளதாக அமைச்சர் சுட்டிக் காட்டினார். அடுத்த இரண்டு நாட்களில் மேலும் இரண்டு விமானங்கள் 200 டன் உதவிகளுடன் அனுப்பப்பட உள்ளன, மொத்த உதவி சுமார் 300 டன் நிவாரண உதவியாக வழங்கப்பட உள்ளது.