UAE-ல் ரம்ஜான் பண்டிகையையொட்டி 270 க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் கைதிகளுக்கு விடுதலை

புனித ரமலான் மாதத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சிறைகளில் இருந்து 270க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஏழு எமிரேட்ஸ் ஆட்சியாளர்களின் உத்தரவின் பேரில் இவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
அபுதாபியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் சமூக நலன் இணைப்பாளர் சமியுல்லா கான், ரமலானின் போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகரில் 100 க்கும் மேற்பட்டோர் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றார். “கடவுச்சீட்டு மற்றும் பிற பயண ஆவணங்களை வைத்திருப்பவர்கள், நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர், பாஸ்போர்ட் மற்றும் பயண ஆவணங்கள் இல்லாதவர்களுக்கான செயல்முறை நடந்து வருகிறது” என்று கூறினார்.
“பெரும்பாலான கைதிகள் அஜ்மான் மற்றும் ஷார்ஜாவிலிருந்தும் பின்னர் மற்ற வடக்கு எமிரேட்ஸிலிருந்தும் விடுவிக்கப்பட்டனர். அவர்களில் பெரும்பான்மையானவர்கள்(95 சதவீதம் பேர்) சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்” என்று துபாயில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் சமூக நலன் இணைப்பாளர் இம்ரான் ஷாஹித் கூறினார்.
மொத்தத்தில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆட்சியாளர்கள் புனித மாதத்தில் நல்லெண்ணச் சைகையாக சுமார் 2,600 கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கினர். பெரும்பாலான கைதிகள் அபுதாபியில் (735), அதைத் தொடர்ந்து துபாய் (691), ஷார்ஜா (484), ராஸ் அல் கைமா (368) மற்றும் அஜ்மான் (314) ஆகிய இடங்களில் விடுவிக்கப்பட்டனர்.