பாகுவில் உள்ள தேசிய தலைவரின் கல்லறை, தியாகிகள் பாதையை பார்வையிட்ட UAE அதிபர்

ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், அஜர்பைஜான் குடியரசின் தலைவர் இல்ஹாம் அலியேவ் அவர்களால் நடத்தப்பட்ட இரவு விருந்தில் கலந்துகொண்டார்.
அவரது உயர்மட்ட பயணத்தின் ஒரு பகுதியான விருந்தில், அஜர்பைஜானின் அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் அவரது தூதுக்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த பயணத்தின் போது, ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் இன்று அஜர்பைஜானின் தேசியத் தலைவரும், நவீன அஜர்பைஜானின் நிறுவனருமான ஹெய்தார் அலியேவின் கல்லறைக்குச் சென்றார், அங்கு அவர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர் பின்னர் தியாகிகள் பாதையை பார்வையிட்டார்.
அப்போது, ஷேக் மன்சூர் பின் சயீத் அல் நஹ்யான், துணைத் தலைவர், துணைப் பிரதமர் மற்றும் ஜனாதிபதி நீதிமன்றத்தின் தலைவர்; ஹிஸ் ஹைனஸ் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான்; மற்றும் ஷேக் முகமது பின் ஹமத் பின் தஹ்னூன் அல் நஹ்யான், ஜனாதிபதி நீதிமன்றத்தின் சிறப்பு விவகாரங்களுக்கான ஆலோசகர் ஆகியோர் உடனிருந்தனர்.
UAE ஜனாதிபதி வந்தவுடன், பாகுவின் மேயர் எல்டார் அசிசோவ் மற்றும் பல மூத்த அதிகாரிகள் அவரை வரவேற்றனர்.