அமீரக செய்திகள்
சர்வதேச மனித சகோதரத்துவ தினத்தில் ‘நிலையான அமைதிக்காக’ பிரார்த்தனை செய்த UAE அதிபர்

“உலகம் முழுவதும் அமைதியான சகவாழ்வை அடைவதற்கு ஒற்றுமை மற்றும் புரிதல் அவசியம்” என்று பிப்ரவரி 4 அன்று அனுசரிக்கப்பட்ட சர்வதேச மனித சகோதரத்துவ தினத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஜனாதிபதி ட்வீட் செய்துள்ளார்.
ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் X-ல் பகிர்ந்து கொண்ட சமாதான செய்தியில், “எங்கள் பகிரப்பட்ட மனித விழுமியங்கள் அனைவருக்கும் நிலையான அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நோக்கி நம்மை வழிநடத்தும் என்று நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்,” என்று கூறியுள்ளார்.
2019 ஆம் ஆண்டு இந்த நாளில், போப் பிரான்சிஸ் மற்றும் அல் அஸ்ஹரின் கிராண்ட் இமாம் அஹ்மத் அல் தையிப் ஆகியோர் அபுதாபியில் சந்தித்து, ‘உலக அமைதி மற்றும் ஒன்றாக வாழ்வதற்கான மனித சகோதரத்துவம்’ என்ற ஆவணத்தில் கையெழுத்திட்டனர்.
#tamilgulf