ராயல் சவுதி விமானப்படை போர் விமானம் விபத்துக்குள்ளானதற்கு ஐக்கிய அரபு அமீரகம் இரங்கல்

UAE: தஹ்ரானில் ராயல் சவுதி விமானப்படை போர் விமானம் விபத்துக்குள்ளானதில், அதன் பணியாளர்கள் வீரமரணம் அடைந்ததற்கு, சவுதி அரேபியாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் தனது உண்மையான இரங்கலையும், ஒற்றுமையையும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் (MoFA) வெளியிட்ட ஒரு அறிக்கையில், “சவுதி அரேபியாவின் அரசாங்கம் மற்றும் மக்களுக்கும், இந்த சோகத்தில் தியாகிகளின் குடும்பங்களுக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்ளுகிறோம்” என்று கூறியது
சவுதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சகம், வியாழக்கிழமை பயிற்சிப் பயணத்தின் போது அதன் போர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது, அதில் வீரர்கள் இருவர் கொல்லப்பட்டனர். தஹ்ரானில் உள்ள கிங் அப்துல்அஜிஸ் விமான தளத்தில் வழக்கமான பயிற்சியின் போது F-15 போர் விமானம் விபத்துக்குள்ளாகியது குறிப்பிடத்தக்கது.