அமீரக செய்திகள்
சிலியின் முன்னாள் அதிபர் மறைவுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைவர்கள் இரங்கல்

சிலியின் முன்னாள் அதிபர் செபாஸ்டியன் பினேராவின் மறைவுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைவர்கள் இரங்கல் செய்தி அனுப்பியுள்ளனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைவர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், சிலியின் முன்னாள் அதிபர் மறைவுக்கு சிலியின் ஜனாதிபதி கேப்ரியல் போரிக் ஃபோண்டிற்கு இரங்கல் செய்தி அனுப்பியுள்ளார்.
இதே போன்று துபாயின் துணைத் தலைவர், பிரதமர் மற்றும் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் மற்றும் துணைத் தலைவர், துணைப் பிரதமர் மற்றும் ஜனாதிபதி நீதிமன்றத்தின் தலைவர் ஷேக் மன்சூர் பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோர் இரங்கல் செய்திகளை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளனர்.
#tamilgulf