அமீரக செய்திகள்
சூறாவளி காரணமாக 21 மணிநேரம் UAE -இந்தியா விமானங்கள் ரத்து
மே 26 மற்றும் 27 ம் தேதிகளில் (ஞாயிறு மற்றும் திங்கள்) ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியா இடையேயான பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ரெமல் சூறாவளியின் காரணமாக, மே 26 ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் மே 27 ம் தேதி காலை 9 மணி வரை அனைத்து விமானச் செயல்பாடுகளையும் 21 மணிநேரத்திற்கு நிறுத்தி வைப்பதற்கான இந்திய கொல்கத்தா விமான நிலைய ஆணையத்தின் முடிவைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியது.
இந்த புயல் கொல்கத்தா உள்ளிட்ட மேற்கு வங்க கடலோர பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொல்கத்தாவில் பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக 21 மணி நேரம் விமானச் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய கொல்கத்தா விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது .
#tamilgulf