UAE: நுழைவு அனுமதியை நீட்டிப்பது எப்படி? முழு விளக்கம்

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு வந்துள்ள பார்வையாளர்கள் பல காரணங்களுக்காக நாட்டில் தங்கியிருக்க வேண்டியிருக்கும். இந்நிலையில் பயனர்கள் தங்கள் நுழைவு அனுமதியை நீட்டிக்க ICP எளிய ஆன்லைன் சேவையை வழங்குகிறது. முன்தேவைகள் முதல் பல்வேறு வகையான விசாக்களுக்கான கட்டணம் வரை, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உங்கள் நுழைவு அனுமதியை தடையின்றி நீட்டிப்பதற்கான வழிகாட்டி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
நீட்டிப்புகளின் வகைகள்
அனுமதி எத்தனை நாட்கள், நீட்டிக்கப்படும் நேரம் மற்றும் விசா வகை ஆகியவற்றின் அடிப்படையில் நீட்டிப்பு வகைகள் வேறுபடுகின்றன. முதன்மையாக, அனுமதிகள் 30 நாட்களுக்கு அல்லது 30 நாட்களுக்கு மேல் நீட்டிக்கப்படலாம்.
30 நாட்களுக்கு நீட்டிப்பு
மூன்று வகையான அனுமதிகள் 30 நாட்களுக்கு நீட்டிக்கப்படலாம். அவை பின்வருமாறு:-
- சுற்றுலாவுக்கான நுழைவு அனுமதி நீட்டிப்பு
- வருகை விசாவுக்கான நுழைவு அனுமதி நீட்டிப்பு
- GCC நாடுகளில் வசிப்பவர்களுக்கான நுழைவு அனுமதி நீட்டிப்பு
- சுற்றுலாவுக்கான நுழைவு அனுமதியை 30 நாட்களுக்கு நீட்டிப்பது இரண்டு முறை செய்யப்படலாம். இந்த விண்ணப்பத்தை சுற்றுலா நிறுவனங்கள் மூலம் மட்டுமே செய்ய முடியும்.
- வருகைக்கான நுழைவு அனுமதியை 30 நாட்களுக்கு நீட்டிப்பது இரண்டு முறை செய்யப்படலாம்.
- GCC நாடுகளில் வசிப்பவர்களுக்கான நுழைவு அனுமதியை 30 நாட்களுக்கு நீட்டிப்பது ஒருமுறை மட்டுமே செய்ய முடியும்.
- தேவையான ஆவணங்கள்: அனுமதியை நீட்டிக்கும் போது சமர்ப்பிக்க வேண்டிய மூன்று வகைகளில் ஒவ்வொன்றிற்கும் பாஸ்போர்ட் நகல் தேவை.
கட்டணம்
- சுற்றுலா நுழைவு அனுமதி நீட்டிப்பு: Dh610 (Dh10 இ-சேவை கட்டணம் உட்பட)
- விசாவிற்கான நுழைவு அனுமதி நீட்டிப்பு: Dh610 (Dh10 இ-சேவை கட்டணம் உட்பட)
- GCC நாடுகளில் வசிப்பவர்களுக்கான நுழைவு அனுமதி நீட்டிப்பு: Dh710 (Dh10 இ-சேவைக் கட்டணம் உட்பட)
- 30 நாட்களுக்கு மேல் நீட்டிப்பு
30 நாட்களுக்கு மேல் நீட்டிக்கப்படும் மூன்று வகையான அனுமதிகள் உள்ளன. அவை பின்வருமாறு:
- சிகிச்சைக்கான நுழைவு அனுமதி நீட்டிப்பு
- GCC குடிமக்களின் கூட்டாளிகளுக்கான நுழைவு அனுமதி நீட்டிப்பு
- படிப்பதற்கான நுழைவு அனுமதி நீட்டிப்பு
- சிகிச்சைக்கான நுழைவு அனுமதியின் நீட்டிப்பு 90 நாட்களுக்கு நீட்டிக்கப்படலாம்
- GCC குடிமக்களின் கூட்டாளிகளுக்கான நுழைவு அனுமதி நீட்டிப்பு 60 நாட்களுக்கு நீட்டிக்கப்படலாம்
- படிப்பதற்கான நுழைவு அனுமதியின் நீட்டிப்பு 90 நாட்களுக்கு நீட்டிக்கப்படலாம்
- தேவையான ஆவணங்கள்: அனுமதியை நீட்டிக்கும் போது சமர்ப்பிக்க வேண்டிய மூன்று வகைகளில் ஒவ்வொன்றிற்கும் பாஸ்போர்ட் நகல் தேவை.
கட்டணம்
- சிகிச்சைக்கான நுழைவு அனுமதி நீட்டிப்பு: Dh510 (Dh10 இ-சேவைக் கட்டணம் உட்பட)
- GCC குடிமக்களின் கூட்டாளிகளுக்கான நுழைவு அனுமதி நீட்டிப்பு: Dh260 (Dh10 இ-சேவைக் கட்டணம் உட்பட)
- படிப்பதற்கான நுழைவு அனுமதி நீட்டிப்பு: Dh610 (Dh10 இ-சேவைக் கட்டணம் உட்பட)
தகுதி
- விண்ணப்பதாரர்கள் தங்கள் நுழைவு அனுமதியை நீட்டிக்க சில தகுதி நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
- விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட் ஆறு மாதங்களுக்கு மேல் செல்லுபடியாக இருக்க வேண்டும்.
- நீட்டிப்புக்கு விண்ணப்பிக்கும் போது, கோரிக்கையை ரத்து செய்வதைத் தவிர்க்க, வாடிக்கையாளர்கள் அவர்களுக்கு அனுப்பப்பட்ட வழிமுறைகளையும் தேவைகளையும் பின்பற்ற வேண்டும்.
- விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட 48 மணிநேரத்திற்குப் பிறகு நுழைவு அனுமதி வழங்கப்படுகிறது.