அமீரக செய்திகள்
மூன்று நாட்களாக காணாமல் போன எமிரேட்டி இளைஞர் கண்டுபிடிக்கப்பட்டார்!

UAE:
மூன்று நாட்களாக காணாமல் போன எமிரேட்டி இளைஞர் ஒருவர் நேற்று கண்டுபிடிக்கப்பட்டார்.
அகமது முகமது அவாத் அல் மென்ஹாலி சவுதி அரேபியாவில் உள்ள தனது பண்ணைக்கு காரில் சென்று கொண்டிருந்த போது காணாமல் போனார். கடைசியாக அவருக்கு ஒரு பெட்ரோல் பங்கில் தொடர்பு ஏற்பட்டது.
இந்நிலையில், சவுதி தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று போலீசாரிடமிருந்து அறிக்கையைப் பெற்று, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் எல்லைக்கு அருகில் உள்ள கிழக்கு சவுதி அரேபியாவில் அமைந்துள்ள அல் துவைர் பகுதியில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது.
அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்களின் கூட்டு முயற்சியால், அல் மென்ஹாலி மூன்று நாட்களாக தொடர்பு இல்லாத நிலையில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டார்.
#tamilgulf