வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஓமனுக்கு ஐக்கிய அரபு அமீரகம் இரங்கல்

ஜனாதிபதி ஷேக் முகமது, ஓமன் சுல்தானகத்தை தாக்கிய வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுல்தான் ஹைதம் பின் தாரிக் அல் சையிற்கு இரங்கல் செய்தி அனுப்பியுள்ளார். மேலும், காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வாழ்த்தியுள்ளார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துணைத் தலைவர்களான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் மற்றும் ஷேக் மன்சூர் பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோரும் இதே போன்ற செய்திகளை ஓமன் சுல்தானுக்கு அனுப்பினர்.
நாட்டில் பெய்த கனமழையால், ஓமனின் பல்வேறு பகுதிகள் கடுமையான வெள்ளத்தில் மூழ்கின. பேருந்துகளில் சிக்கிய பள்ளி மாணவர்களையும், வெள்ளம் சூழ்ந்த வீடுகளுக்குள் சிக்கித் தவிக்கும் குடும்பங்களையும் ராயல் ஓமன் காவல் துறையினர் உடனடியாக மீட்டனர்.
திங்களன்று ஓமானில் கனமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், சிவில் பாதுகாப்பு மற்றும் ஆம்புலன்ஸ் ஆணையம் (சிடிஏஏ) வடக்கு அல் ஷர்கியா மாகாணத்தில் காணாமல் போன ஒருவரின் உடலை மீட்டுள்ளது. சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது பதின்மூன்றாக உள்ளது.