UAE குடிமக்கள் இப்போது கொசோவோவிற்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம்

UAE:
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் கொசோவோ இடையே புரிந்துணர்வு ஒப்பந்ததம் கையெழுத்திடப்பட்டதையடுத்து UAE குடிமக்கள் இப்போது கொசோவோவிற்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம்.
புரிந்துணர்வு ஒப்பந்தம் சாதாரண, இராஜதந்திர, சிறப்பு மற்றும் பணி பாஸ்போர்ட்களை வைத்திருப்பவர்களுக்கு விசா தேவைகளில் பரஸ்பர விலக்கு அளிக்கிறது.
குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் பாஸ்போர்ட்களை வைத்திருக்கும் UAE குடிமக்கள் கொசோவோவிற்கு நுழைவதற்கான விசா தேவையிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள், மேலும் ஒரு வருகைக்கு 90 நாட்கள் வரை அங்கு தங்கலாம்.
இதேபோன்று செல்லுபடியாகும் இராஜதந்திர, அதிகாரப்பூர்வ மற்றும் சாதாரண பாஸ்போர்ட்களை வைத்திருக்கும் கொசோவோவின் குடிமக்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நுழைவதற்கான விசா தேவையிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.
வெளியுறவு அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் கொசோவோவின் துணைப் பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சர் டொனிகா குர்வல்லா-ஸ்வார்ஸ் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை வரவேற்றனர்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியுறவு அமைச்சகத்தின் துணைச் செயலாளர் கலீத் அப்துல்லா பெல்ஹோலும், கொசோவோ சார்பில் ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கான கொசோவோ தூதர் ஷபீர் ஹமிட்டியும் கையெழுத்திட்டனர்.