அமீரக செய்திகள்
காப்பீட்டு நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்த UAE மத்திய வங்கி

UAE:
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மத்திய வங்கி முக்கியமான தேவைகளுக்கு இணங்கத் தவறியதற்காக காப்பீட்டு நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் செயல்படும் ஃபர்ஸ்ட் இன்சூரன்ஸ் புரோக்கர்ஸ் நிறுவனம், காப்பீட்டு தரகு முறையின் தேவைகளுக்கு இணங்கத் தவறிவிட்டது என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிறுவனத்தின் பெயரும் பதிவேட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.
#tamilgulf