எமிரேட்ஸில் சிகிச்சை பெற்று வரும் காயமடைந்த குழந்தைகளை நேரில் சந்தித்த ஜனாதிபதி நீதிமன்றத்தின் அதிகாரி

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி நீதிமன்றத்தில் அபிவிருத்தி மற்றும் தியாகிகள் குடும்ப விவகாரங்களுக்கான அலுவலகத்தின் தலைவர் ஷேக் தியாப் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மருத்துவமனைகளில் மருத்துவ சிகிச்சை பெறும் பாலஸ்தீனிய குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை பார்வையிட்டார்.
இந்த முயற்சியானது பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவளிக்கும் தொடர்ச்சியான மனிதாபிமான நிவாரணத்தின் ஒரு பகுதியாகும். முன்னதாக 1,000 பாலஸ்தீனிய குழந்தைகளுக்கு ஐக்கிய அரபு எமிரேட் சுகாதார மையங்களில் சிகிச்சை அளிப்படும் என்று ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதன்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சிகிச்சை பெற்று வரும், காயமடைந்த குழந்தைகள் மற்றும் வயது வந்த குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த குழந்தை புற்றுநோயாளிகளை ஷேக் தியாப் சந்தித்தார். மேலும், குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் பேசிய ஷேக் தியாப் அவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்தி தெரிவித்தார்.