அமீரக செய்திகள்
பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு வாகனங்கள் தீப்பிடித்து எரிந்து சேதம்

துபாயில் உள்ள பார்க்கிங் பகுதியில் இன்று காலை நிறுத்தப்பட்டிருந்த இரண்டு வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. இன்று காலை 10.50 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.
துபாய் சிவில் டிஃபென்ஸ் அறிக்கையின்படி, தீயணைப்பு வீரர்கள் நான்கு நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு வந்து இரண்டு வாகனங்கள் (ஒரு கார் மற்றும் ஒரு SUV) தீப்பிடித்து எரிவதைக் கண்டனர். அவர்கள் 10 நிமிடங்களில் தீயை அணைத்தனர், ஆனாலும் \ இரு வாகனங்களும் எரிந்து நாசமானது. உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் என்ன என்பதை சிவில் பாதுகாப்பு குறிப்பிடவில்லை.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் விரிவான வாகனக் காப்பீடு திட்டம் தீயினால் ஏற்படும் சேதங்களை உள்ளடக்கும். வாகன ஓட்டிகள் காப்பீட்டு நிறுவனத்திடம் இழப்பீடு கோர போலீஸ் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
#tamilgulf