அமீரக செய்திகள்
துபாயில் இரண்டு நாட்கள் இலவச பார்க்கிங்

Dubai:
துபாயில் உள்ள வாகன ஓட்டிகள் வரவிருக்கும் நீண்ட வார இறுதியில் இரண்டு நாட்கள் இலவச பார்க்கிங்கை அனுபவிக்கலாம்.
புதிய ஆண்டின் முதல் நாளில் அதாவது, ஜனவரி 1, 2024 திங்கட்கிழமை அன்று பொது வாகன நிறுத்தம் இலவசம் என்று சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அறிவித்துள்ளது. துபாயில் ஞாயிற்றுக்கிழமைகளில் கட்டணம் செலுத்தும் பார்க்கிங் இலவசமாகும்.
பல நிலை டெர்மினல்களுக்கு இலவச பார்க்கிங் பொருந்தாது. பார்க்கிங் கட்டணம் ஜனவரி 2, 2024 செவ்வாய் அன்று மீண்டும் செயல்படுத்தப்படும்.
#tamilgulf