ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கடந்த வாரம் அதிக மழை பெய்த முதல் 3 பகுதிகள்
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சமீபத்தில் பெய்த மழை நிகழ்வின் போது அபுதாபியில் உள்ள அல் தஃப்ரா பகுதியில் அதிகபட்ச மழை பெய்ததாக தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது.
கடந்த வியாழன் அன்று, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பலத்த மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ததால், NCM ஆரஞ்சு எச்சரிக்கையை வெளியிட்டது. மாணவர்கள் தொலை தூரக் கல்விக்கு மாறும் போது சில குடியிருப்பாளர்கள் வீட்டிலேயே இருந்தனர். அதிகாலையில் வெளியே வந்தவர்கள் பலத்த காற்று மற்றும் மழையை எதிர் கொண்டனர். வடக்கில், இருண்ட மழை மேகங்கள் மலைகளின் மீது வட்டமிட்டதால் நீர்வீழ்ச்சிகள் கொட்டின.
NCM ன் வானிலை நிபுணர் டாக்டர் ஹபீப் கூறுகையில், அபுதாபியில் உள்ள அல் தஃப்ரா மிக அதிக மழையைப் பதிவு செய்ததாகக் கூறினார்.
மேலும் அவர், “அல் தஃப்ரா பகுதியில் பதிவான மழைப்பொழிவு 72.3 மி.மீ. ஆகும். இதைத் தொடர்ந்து மஜில் படா தலாப் மற்றும் அபு அல்-அபியாத் பகுதிகளில் முறையே 67.9 மிமீ மற்றும் 58.5 மிமீ மழை பெய்துள்ளது” என்றார்.