அமீரக செய்திகள்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இன்றைய வானிலை அறிவிப்பு
தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) வெள்ளிக்கிழமை (மே 31) காலை மூடுபனி காரணமாக மோசமான பார்வைத் திறன் குறித்து வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இன்று வெப்பநிலை அதிகரிப்புடன் பொதுவாக சீரான வானிலையை எதிர்பார்க்கலாம்.
வெள்ளி இரவு மற்றும் சனிக்கிழமை காலை வரை ஈரப்பதமாக இருக்கும், சில கடலோரப் பகுதிகளில் மூடுபனி உருவாக வாய்ப்பு உள்ளது.
அபுதாபி மற்றும் துபாயில் முறையே 44 டிகிரி செல்சியஸ் மற்றும் 42 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாட்டில் லேசானது முதல் மிதமான காற்று வீசும், இதனால் அரேபிய வளைகுடா மற்றும் ஓமன் கடல் பகுதியில் கடல் அலை சற்று சிறிதாக இருக்கும்.
#tamilgulf