புத்தகக் கடையில் உள்ள ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வெள்ளத்தில் மூழ்கின

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் செவ்வாயன்று பலத்த மழை பெய்த நிலையில், துபாயை தளமாகக் கொண்ட புத்தகக் கடை, ப்ரீலவ்டு புக்ஸ், அதன் உயிர் வாழ்வை அச்சுறுத்தும் வெள்ளத்தின் பின்விளைவுகளுடன் போராடுகிறது. சிலிக்கான் ஒயாசிஸில் உள்ள புத்தகக் கடையின் அடித்தளத்தில், ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வெள்ளத்தில் மூலகியுள்ளன..
லெபனான் குடியிருப்பாளரும் புத்தகக் கடை உரிமையாளர்களில் ஒருவருமான கிரேஸ் கரீம், அன்று நடந்த சம்பவங்களைத் தெளிவாக விவரித்தபோது, ”எல்லாமே இல்லாமல் போனதைப் பார்ப்பது மனவேதனையாக இருக்கிறது” என்று கூறினார்.
செவ்வாய் காலை 11 மணியளவில், நீர் ஏற்கனவே அடித்தளத்திற்குள் 30 செ.மீ ஆழத்தை எட்டியது. தங்கள் கடையைப் பாதுகாக்க, அவசரமாக ஒரு கேடயத்தை அமைத்தனர், ஆனால் தண்ணீர் பாதுகாப்பை மீறியதால் முயற்சிகள் வீணாகின. ஆயிரக்கணக்கான புத்தகங்கள் நீரில் மூழ்கின, அவற்றை வைத்திருந்த மர அலமாரிகள் கடுமையான சேதத்தை சந்தித்தன, இதனால் முழு மாற்றீடு தேவைப்படுகிறது.
நம்பிக்கையில்லாமல், கிரேஸ் மற்றும் அவரது கூட்டாளியான சோமியா அன்வர், முழு அளவிலான சேதத்தை மதிப்பிடுவதற்கு நீர் வடிகால் செயல்முறை முடிவடைய காத்திருக்கின்றனர். அடித்தளத்திற்குள் நுழைந்தபோது, 3,000 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் சேதமடைந்திருந்தது என்று கிரேஸ் வேதனையுடன் கூறினார்.
ப்ரீலவ்டு புக்ஸ் ஐப் பொறுத்தவரை, இந்தப் பேரழிவு ஒரு நிதிப் பின்னடைவைக் காட்டிலும் அதிகமாகும்.