அமீரக செய்திகள்
ஷார்ஜா அரசாங்க தகவல் தொடர்பு விருதுக்கு உலகம் முழுவதிலுமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

ஷார்ஜா அரசாங்க தகவல் தொடர்பு விருது (SGCA) பதினொன்றாவது பதிப்பில் உலகம் முழுவதிலுமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படும்.
SGCA ன் பதினோராவது பதிப்பு ஐந்து பிரிவுகளில் 22 பிரிவுகளைக் கொண்டிருக்கும், அதாவது அரசு, சர்வதேச நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை, தனிப்பட்ட விருதுகள், சவால் மற்றும் போட்டி விருதுகள், ஜூரி விருதுகள் மற்றும் பங்குதாரர் விருதுகள் ஆகும்.
இந்த ஆண்டுக்கான விருதுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.igcc.ae என்ற இணையதளத்தின் மூலம் மே 7 முதல் ஆகஸ்ட் 1 வரை ஆன்லைனில் பதிவு செய்யலாம் என ஷார்ஜா அரசு ஊடகப் பணியகம் (SGMB) அறிவித்துள்ளது.
#tamilgulf