அமீரக செய்திகள்

ஜூலை 28 வரை நாடு தழுவிய பயிற்சி நடைபெறும்- உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

ஜூலை 28, 2024 வரை நாடு தழுவிய பயிற்சி நடைபெறும் என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்தப் பயிற்சியானது இராணுவ வாகனங்களின் இயக்கத்தை உள்ளடக்கியது. எனவே, நியமிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து விலகி இருக்குமாறு குடியிருப்பாளர்களை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. மேலும் இந்த நிகழ்வை புகைப்படம் எடுக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

பயிற்சியில் பங்கேற்கும் வாகனங்களுக்கு வழி ஏற்படுத்தித் தருமாறும், அவர்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கு இடவசதியை ஏற்படுத்தித் தருமாறும் குடியிருப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

‘ரெசிலைன்ஸ் 1’ என்ற பயிற்சியானது, நாடு முழுவதும் உள்ள காவல்துறை தலைமையக அளவில் நடத்தப்பட்டு, தயார்நிலையை மேம்படுத்தும் வகையில், கூட்டாளர்களின் ஒத்துழைப்புடன் நடத்தப்படும்.

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button