தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் இருந்து மாற்றிடம் செல்ல குத்தகைதாரர்கள் முடிவு

துபாய் மற்றும் ஷார்ஜாவில் இன்னும் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வசிக்கும் பலர் தங்கள் வாடகை ஒப்பந்தத்தை காலாவதியான பிறகு புதுப்பிக்கத் திட்டமிடவில்லை என்று கூறினர். வெள்ளம் குறைவாக உள்ள பிற பகுதிகளுக்கு இடம் பெயர்வதற்கான தங்கள் திட்டத்தை அவர்கள் வெளிப்படுத்தினர்.
ஏப்ரல் 16, செவ்வாய் கிழமை பெய்த மழையால் ஆறு நாட்களுக்குப் பிறகும் தெருக்கள் வெள்ளத்தில் மூழ்கியதால், சில பகுதிகளில் வசிப்பவர்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். மின்சாரம் மற்றும் நீர் இன்னும் மீட்டெடுக்கப்படாததால் பல குடியிருப்பாளர்கள் கட்டிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இதனால், தற்போதுள்ள ஒப்பந்தத்தை முடித்து விட்டு, வெள்ளம் தேங்காத பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து விட வேண்டும் என்று குடியிருப்புவாசிகள் நினைக்கத் தொடங்கினர்.
9 ஆண்டுகளாக அபு ஷாகராவில் வசிக்கும் பிரியா பிரசனா, சமீபத்தில் தனது குத்தகை ஒப்பந்தத்தை புதுப்பித்துள்ளார், அதனால் தங்களால் இப்பொழுது வெளியேற இயலாது. அடுத்த ஆண்டு ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பதற்கான நேரம் வரும் பொழுது, நாங்கள் வெளியேறுவோம் என்று கூறினார்.
அல் மஜாஸ் குடியிருப்பாளரான அபு அயத், “வெள்ளம் இல்லாத பகுதிகளுக்கு நான் பெரும்பாலும் வெளியேறுவேன். இந்த வருடத்தில் இரண்டாவது தடவையாக இப்பகுதிகள் பாரிய வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மழை பெய்த போது நிலைமை மிகவும் மோசமாக இருந்தது” என்று அவர் கூறினார்.