படித்ததில் பிடித்தது

அடுத்தவர்களுக்காக வாழ்தல் – வாழ்க்கையின் உண்மையான அர்த்தம்

தன் வாழ்வை விட பிறரின் வாழ்வை மதிக்கும் மனமே உண்மையான வாழ்க்கை

அடுத்தவர்களுக்காக வாழ்தல் !

ஒரு இளைஞன் வசதியான குடும்பம் ! அவனுக்கு வாழ்க்கையில் நிம்மதி இல்லை ! வாழவே பிடிக்க வில்லை ! எல்லாமே வெறுத்து போய் விட்டது ! என்ன பண்ணலாம் என்று யோசித்தான் ?

ஒரு குருவைத் தேடிப் போனான் ! அவரிடம் தான் வந்த விவரத்தைச் சொல்லி ? ஏதாவது வழி சொல்லுங்கள் என்று கேட்டான் !

அவர் பார்த்தார் ! சரி அதற்கு முன் உன்னைப் பற்றி கொஞ்சம் சொல் ! எவ்வளவு படித்திருக்கிறாய் ? உனக்கு என்ன தெரியும் ? என்று கேட்டார் !

சுவாமி நான் ஒழுங்காக படிக்கவில்லை ! எதுவும் தெரியாது ! ஆனால் ? கொஞ்சம் சதுரங்கம் ஆட தெரியும் அவ்வளவுதான் என்றான் !

குரு கொஞ்சம் யோசனை செய்தார் ! பக்கத்திலிருந்த ஒரு சீடனை கூப்பிட்டார் !

அவரிடம் ஒரு சீடனின் பெயரைச் சொல்லி ! நீ உடனே போய் அவரை இங்கே அழைத்துவா என்றார் ! வரும் போது ஒரு சதுரங்கப் பலகையையும் விளையாடுவதற்கான காய்களையும் எடுத்துக் கொண்டு வா ! சீடர்கள் எல்லோரையும் இங்கே வரச் சொல் என்றார் !

கொஞ்ச நேரத்தில் எல்லோரும் வந்து சேர்ந்தார்கள் ! சதுரங்கப் பலகையைக் கொண்டு வந்து வைத்தார்கள் ! அந்த சீடரும் வந்து சேர்ந்தார் !

குரு அவரை அருகில் கூப்பிட்டு ! கொஞ்ச நேரம் சதுரங்கம் ஆட வேண்டும் என்றார் !

அந்த சீடனிற்கு சதுரங்கம் என்றாலே என்னவென்றே தெரியாது ! இருந்தாலும் மறுப்பு எதுவும் சொல்லவில்லை !

குரு சொன்னார் ! நீர் என்னுடைய சீடர் ! என் பேச்சை மறுக்காதவர் ! உம்முடைய அடக்கத்தையும் பணிவையும் நான் அறிவேன் !

எனக்காக உயிரையும் கொடுப்பதாகச் சொல்லி இருக்கிறீர்கள் ! இப்போது அதற்கான வாய்ப்பு வந்திருக்கிறது ! அந்த இளைஞனுடன் சதுரங்கம் ஆட வேண்டும் ! தோற்றுப் போனால் ? இந்த வாளால் உன் தலையை சீ*வி விடுவேன் !

இறந்தால் சொர்க்கம் நிச்சயம் ! நீங்கள் வெற்றி பெற்று விட்டால் ? தோற்றுப் போன இந்த இளைஞனின் தலையைச் சீ*வி விடுவேன் ! சரி இப்போது நீங்கள் ஆட்டத்தை ஆரம்பிக்கலாம் என்றார் !

ஆட்டம் ஆரம்பமாகியது ! அந்த சீடனின் முகத்தில் சலனமே இல்லை ! சா*வை பற்றி கவலைப் பட்டதாகவே தெரியவில்லை ! எதுவும் புரியவில்லை என்றாலும் ? குருவின் கட்டளை என்பதால் ? ஏதோ ஒரு காயை நகர்த்திக் கொண்டிருந்தார் !

சுற்றியிருந்த சீடர்கள் முகத்தில் திகில் ! பயம் ! பாவம் நிலைமை இப்படி ஆகிவிட்டதே ? என்கின்ற கவலை !

குருவின் கையிலே பெரிய வாள் பளபளப்பாக இருந்தது !

சீடன் காய் நகர்த்துவது ஆரம்பத்தில் ஆச்சரியமாக தெரிந்தாலும் ? அவருக்கு சதுரங்கம் பற்றி எதுவுமே தெரியாது என்பது ? இளைஞனுக்கு புரிந்தது ! அவனுக்கு உற்சாகம் வந்து விட்டது ! சுறுசுறுப்பாக காய்களை நகர்த்த ஆரம்பித்தான் !

சீடர் கொஞ்சம் கொஞ்சமாக தோற்றுக் கொண்டே வந்தார் !

சுற்றியிருந்த சீடர்கள் முகத்தில் சொல்லமுடியாத வேதனை ! இளைஞன் முகத்தில் மகிழ்ச்சி ! நிமிர்ந்து பார்த்தான் !

எதிரில் இருந்த சீடனின் முகத்தைப் பார்த்ததும் ? அவனுக்கு ரொம்ப பாவமாக இருந்தது ! அந்த முகத்தில் தான் எவ்வளவு சாந்தம் ! எவ்வளவு இனிமை ! அவர் கண்களில் எவ்வளவு கருணை ! இவர் சா*கத்தான் வேண்டுமா ? இளைஞன் யோசிக்க ஆரம்பித்தான் !

நான் இ*றந்து போனால் ? யாருக்கும் எந்த வியப்பும் இல்லை !

வீணாகிப் போன தன் வாழ்வும் ? சா*வும் யாரையும் பாதிக்காது ! ஆனால் ? துறவியான கருணை மிக்க இவர் இறந்தால் ? அது எவ்வளவு பெரிய வியப்பு ! அதற்கு நாம் காரணமாக இருப்பதா ? இப்படி நினைத்தான் !

அந்த இளைஞன் வேண்டுமென்றே உடனே கன்னா பின்னா என்று தப்பு தப்பாக விளையாட ஆரம்பித்தான் ! தான் தோற்றுப்போக வேண்டும் என்று முடிவெடுத்தான் !

அதை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த குரு ! சதுரங்கப் பலகையை கவிழ்த்தார் ! காய்கள் எல்லாம் சிதறிப் போய் விட்டன ! எல்லோரும் திகைத்துப் போனார்கள் !

யாருக்கும் வெற்றி தோல்வி இல்லை என்று அறிவிக்கிறேன் என்றார் குரு !

உன்னுடைய மன ஒருமைப் பாட்டை கவனித்தேன் ! முழுமையாக ஆட்டத்திலே மூழ்கி போனதையும் பார்த்தேன் ! கடைசியில் உயிர்த் தியாகம் செய்ய முடிவெடுத்து ? தாறுமாறாக ஆடியதையும் கவனித்தேன் !

வாழ்க்கை என்றால் என்ன என்பதும் ? எந்த வாழ்க்கை பயனுள்ள வாழ்க்கை என்பதும் ? உனக்கு புரிந்து விட்டது !

இப்போது இங்கே அதை நீ கற்றுக் கொண்டாய் ! உன்னுடைய மனம் பக்குவ நிலையை அடைந்து விட்டது ! தியாகம் உன் இதயத்தில் குடி கொண்டு விட்டது !

அது எங்கிருந்தும் வரவில்லை ! உனக்குள் இருந்துதான் அது வந்தது ! அதை நீ அடையாளம் கண்டு கொண்டாய் !

இனிமேல் கொஞ்ச காலம் நீ இங்கே இருந்து விட்டுப் போகலாம் ! உன்னுடைய வாழ்வு பயனுள்ள வாழ்வாகும் ! என்றார் அந்த குரு !

நிறைய பேர் ஏன் எதற்கு வாழ்கிறோம் என்றே தெரியாமல் வாழந்து வருகின்றனர் ! அவர்களும் ஒரு முறை இதேபோல முயற்சி செய்தால் நல்லது…

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button