அமீரக செய்திகள்
அரபிக்கடலில் உருவான அஸ்னா புயல் முடிவுக்கு வந்தது
அரபிக்கடலில் கரையைக் கடக்கவிருந்த அஸ்னா புயல், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA) தெரிவித்துள்ளது.
தற்போது புயல் முடிவுக்கு வந்துள்ளதாக புயலை மதிப்பிடும் கூட்டு மதிப்பீட்டுக் குழு தெரிவித்துள்ளது.
அரபிக்கடலில் கரையைக் கடந்த வெப்பமண்டல புயலை ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் முன்னரே கண்காணித்து வந்தனர்.
கடுமையான வானிலை நேரடியாக நாட்டை பாதிக்காது என்று ஆரம்ப அளவீடுகள் சுட்டிக்காட்டியுள்ளன என்று NCEMA சனிக்கிழமை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
#tamilgulf