அமீரக செய்திகள்
ஷார்ஜாவில் இரண்டு முக்கிய சாலைகளில் வேக வரம்பு குறைப்பு
ஷார்ஜாவின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) மே 25 சனிக்கிழமையன்று அல் இத்திஹாத் சாலை மற்றும் அல் வஹ்தா சாலையில் வேக வரம்பை குறைப்பதாக அறிவித்தது.
சமூக ஊடகப் பதிவில், 100 கி.மீ வேகத்தில் இருந்து 80 கிமீ வேகமாக குறைக்கப்படும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது. சாலைகளில் சீரான போக்குவரத்தை உறுதி செய்ய, புதிய வேக வரம்பை கடைபிடிக்குமாறு வாகன ஓட்டிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கடந்த வாரம் செவ்வாய்கிழமையன்று, ராஸ் அல் கைமா காவல்துறை, எமிரேட்டின் ஒரு முக்கிய சாலையில் வேக வரம்பை அதிகரிப்பதாக அறிவித்தது, அல் வதன் சாலையில் 100kmph லிருந்து 120kmph ஆக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
#tamilgulf