அமீரக செய்திகள்
துபாய் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஷேக்கா மஹ்ராவுக்கு பெண் குழந்தை பிறந்தது

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமின் மகளான ஷேக்கா மஹ்ரா பின்த் முகமது பின் ரஷித் அல் மக்தூம் தனது முதல் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
ஷேக் மனா பின் முகமது பின் ரஷீத் பின் மனா அல் மக்தூமை மணந்த ஷேக்கா மஹ்ரா தம்பதியினர் ஆரோக்கியமான பெண் குழந்தையை வியாழக்கிழமை வரவேற்றனர்.
ஷேக்கா மஹ்ரா பின்த் மனா பின் முகமது அல் மக்தூம் என்ற பெண் குழந்தையின் பெயரையும் அவர் தெரிவித்தார்.
#tamilgulf