அமீரக செய்திகள்

பணியின் போது மரணமடைந்த தீயணைப்பு வீரருக்கு ஷேக் ஹம்தான் இரங்கல்

துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், பணியின் போது உயிரிழந்த தீயணைப்பு வீரரின் குடும்பத்தை நேரில் சென்று சந்தித்தார். மேலும் ஷேக் ஹம்தான், அல் அவிரில், அல் கபயேல் மையம் தீப்பிடிக்கும் போது உயிரிழந்த துபாய் குடிமைத் தற்காப்பு தீயணைப்பு வீரர் சார்ஜென்ட் உமர் கலீஃபா சலேம் அல் கெட்பியின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலைத் தெரிவித்தார்.

சனிக்கிழமையன்று, ஷேக் ஹம்தான் சார்ஜென்ட் அல் கெட்பியின் நினைவை துபாய் எப்போதும் மதிக்கும் என்று ட்வீட் செய்திருந்தார். துபாய் குடிமைத் தற்காப்பு தீயணைப்பு துரையின் “உயிர், உடைமை மற்றும் நாட்டின் பாதுகாப்பிற்காக தன்னலமின்றி தங்கள் உயிரைக் காக்கும் துணிச்சலான மனிதர்களுக்கு” அவர் தனது நிறைந்த அஞ்சலிகளை செலுத்தினார்.

வெள்ளிக்கிழமை அல் கபயேல் மையத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்களில் 29 வயதான சார்ஜென்ட் அல் கெட்பியும் ஒருவர். பல குழுக்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்த பிறகு, குளிரூட்டும் கட்டத்தில் கட்டிடத்தின் கூரையின் ஒரு பகுதி இடிந்து தீயணைப்பு வீரரின் மேல் விழுந்தது, இதன் விளைவாக அதிகாரி இறந்தார்.

அவர் செப்டம்பர் 2017 முதல் துபாய் சிவில் டிஃபென்ஸ் பணியாற்றிக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிட தக்கது.

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button