அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு

Sharjah:
ஷார்ஜா நகர முனிசிபாலிட்டி, முடி சலூன்கள் மற்றும் அழகு மையங்களில் அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களின் தொகுப்பை வெளியிட்டுள்ளது. அனைவரின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்காக இந்த வழிகாட்டுதல்களை கடைபிடிக்குமாறு சலூன்களை ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. மையங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
1. விரிவான லேபிள்கள் இல்லாமல் அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துதல்
2. கலவைகளை உருவாக்குதல், கிரீம்கள் மற்றும் எண்ணெய்களை கலக்குதல் அல்லது வீட்டில் தயாரிக்கப்பட்ட கலவைகளைப் பயன்படுத்துதல்
3. AHA மற்றும் BHA போன்ற பழ அமிலங்களைக் கொண்ட கிரீம்களைப் பயன்படுத்துதல்
4. 0.2 சதவீதத்திற்கும் அதிகமான ஃபார்மால்டிஹைடு கொண்ட கெரட்டின் போன்ற முடி நேராக்க பொருட்களைப் பயன்படுத்துதல்
5. ஹைட்ரோகுவினோன் கொண்ட கிரீம்களைப் பயன்படுத்துதல்
6. கார்டிகோஸ்டீராய்டுகள் அல்லது டெரிவேடிவ்கள் கொண்ட கிரீம்களைப் பயன்படுத்துதல்
7. சருமத்தை வெண்மையாக்க கிரீம்களைப் பயன்படுத்துதல்
8. மருத்துவ அல்லது சிகிச்சை நோக்கங்களுக்காக அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துதல்
9. தடை செய்யப்பட்ட அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துதல்