அமீரக செய்திகள்
பாலஸ்தீனியர்களுக்கு வான்வழி உதவிகளை அனுப்பிய சவுதி அரேபியா, ஜோர்டான்!
ரியாத்: காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக அனுப்பப்படும் ஜோர்டானிய ஹாஷிமைட் தொண்டு நிறுவனத்திற்கு சவுதி அரேபியாவின் உதவி நிறுவனமான KSrelief உபகரணங்கள் மற்றும் கருவிகளை வழங்கியுள்ளது.
ஜோர்டானின் ஆயுதப் படைகள் இஸ்ரேலின் முற்றுகையின் கீழ் இருக்கும் பகுதிக்கு 30 டன் பொருட்களை வான்வழியாக அனுப்பும்.
இந்த முயற்சியானது பாலஸ்தீன மக்களுக்கு உதவும் சவுதி அரேபியாவின் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும்.
காசவிற்கு பல்வேறு வழிகளில் மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் ராஜ்ஜியம் உறுதியுடன் உள்ளது என்று தெரிவித்துள்ளது.
#tamilgulf